டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு புகார் எதிரொலி - பயிற்சி மையங்களில் ஆய்வு நடத்த சிபிசிஐடி முடிவு

டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு புகார் எதிரொலி - பயிற்சி மையங்களில் ஆய்வு நடத்த சிபிசிஐடி முடிவு
x
தமிழகத்தில் காலியாக உள்ள அரசுப் பணிகளுக்கு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையம் மூலம், நிரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு மையத்தில் நடந்த தேர்வர்களின் தேர்ச்சி மற்றும் தேர்வு மையம் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து, குரூப்-4 தேர்வு குறித்தும் முறைகேடு புகார் உள்ளது. இதைத் தொடர்ந்து, தேர்வர்கள், டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையம் வரவழைக்கப்பட்டு, மாற்று கேள்வித் தாள் மூலம் சோதிக்கப்பட்டனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இது பயிற்சி மையங்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்