பயோமெட்ரிக் வருகைப்பதிவு - வருகை பதிவு செய்யாதவர்கள் விளக்கம் அளிக்க உத்தரவு
பயோ மெட்ரிக் வருகைப்பதிவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
பயோ மெட்ரிக் வருகைப்பதிவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அமலில் உள்ள நிலையில், கடந்த 22ஆம் தேதி ஏராளமானோர் வருகைப்பதிவு செய்யவில்லை என்றும், இவர்கள் வரும் 28ம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வருங்காலங்களில், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
Next Story