"1700 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அரசிடம் திரும்ப ஒப்படைப்பு" - தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதன் எதிரொலியாக, 1700 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் மாணவர் எண்ணிக்கை சரிந்து வருகிறது. ஆனால், மாணவர் எண்ணிக்கை சரியவில்லை என்று கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறைந்து வருவதை எடுத்துக்காட்டும் விதமாக, ஆயிரத்து 700 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அரசிடம் ஒப்படைக்கப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. இனிமேல் இந்த பணியிடங்களுக்கு ஆசிரியர்களை கேட்கக் கூடாது என கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக இனிமேல் அரசுப் பள்ளிகளில், குறிப்பாக பள்ளி கல்வித்துறை கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் என்பது இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story