குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம் - சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள் ரத்து
குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய 9 மையங்களை ரத்து செய்து டி.என்.பி.எஸ் நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
குரூப்-4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. தேர்வாணையம் நடத்திய பல கட்ட விசாரணையில் முறைகேடு நடந்திருப்பதை தேர்வாணையம் உறுதி செய்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஓரிரு நாளில் அதிரடி முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தேர்வு முறைகேட்டில் சிக்கிய சர்ச்சைக்குரிய ஒன்பது மையங்களை ரத்து செய்து டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் உள்ள ஐந்து தனியார் பள்ளிகள், ஒரு தனியார் பாலிடெக்னிக் என ஆறு மையங்களும், கீழக்கரையில் உள்ள இரண்டு தனியார் கல்லூரி, ஒரு தனியார் பள்ளி என ஒட்டு மொத்த ஒன்பது மையங்களில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த ஒன்பது மையங்களில் தேர்வு எழுதியவர்களுக்கு மறுத்தேர்வு நடத்தவோ அல்லது அவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு புதிய பட்டியலை வெளியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
Next Story