கைதிகளால் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் : மலிவு விலையில் விற்பனை செய்ய திட்டம்
திருச்சி சிறையில், நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தண்டனை கைதிகள், திறந்தவெளி சிறையில் உள்ள நிலங்களில், அரை ஏக்கர் பரப்பளவில் வெங்காயம் பயிரிட்டு இருந்தனர்.
திருச்சி சிறையில், நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தண்டனை கைதிகள், திறந்தவெளி சிறையில் உள்ள நிலங்களில், அரை ஏக்கர் பரப்பளவில் வெங்காயம் பயிரிட்டு இருந்தனர். இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்ட இந்த வெங்காயம், அறுவடை செய்யப்பட்டது. இதன்மூலம், சுமார், 500 கிலோ வெங்காயம் கிடைக்கப் பெற்றுள்ளது. இவற்றை, சந்தை விலையை விட 20 சதவீதம் மலிவாக, சிறைவாசலில் உள்ள சிறை அங்காடியில் விற்பனை செய்யப்பட உள்ளதாக திருச்சி சிறை கண்காணிப்பாளர் சங்கர் தெரிவித்தார்.
Next Story