நித்தியானந்தாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ்
நித்தியானந்தாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸை இன்டர்போல் வழங்கியுள்ளது.
நித்தியானந்தாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவரை குஜராத், கர்நாடக மாநில போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த தகவல் யாருக்கும் தெரியாத சூழல் இருந்தது. இதனிடையே மத்திய வெளியுறவுத்துறையும் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என கண்டறிய முடியவில்லை என தெரிவித்தது. இந்த சூழலில் தான் நித்தியானந்தாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸை வழங்கியிருக்கிறது இன்டர்போல். குஜராத் போலீசாரின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள நபரின் இருப்பிடம் குறித்த தகவல்களை கண்டறிய, புளு கார்னர் நோட்டீஸ் வழங்கப்படும் சூழலில் நித்தியானந்தாவின் இருப்பிடத்தை கண்டறிய இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
புளுகார்னர் நோட்டீஸ்: "நித்தியானந்தாவின் அட்டகாசங்களுக்கு வைக்கப்பட்ட முதல் அடி" - ஜனார்த்தன ஷர்மா
Next Story