மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள் பராமரிப்பு - மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி குறித்து விவாதித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாமல்லபுரத்தை அழகுபடுத்துவது தொடர்பாக நீதிபதி கிருபாகரன் கடிதத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினீத்கோத்தாரி, சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கடந்த 2018-19ஆம் ஆண்டில் மட்டும் 8 கோடியே 14 லட்சம் ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்தது. யுனஸ்கோ அங்கீகாரம் பெற்ற மாமல்லபுரத்தை அழகுப்படுத்த, மத்திய அரசு தான் நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. இது தரப்பு பதிலை கேட்டறிந்த நீதிபதிகள், தேவைப்படும் நிதி குறித்து விவாதித்து பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
Next Story