தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக இதுவரை 10 பேர் கைது

தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக தமிழக கியூ பிரிவு போலீசார், இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு, தற்போது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக இதுவரை 10 பேர் கைது
x
தீவிரவாதி காஜா மொய்தீன் தமிழகத்தில் இருந்து தப்புவதற்கு உதவி செய்ததாகவும், அவருக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்ததாகவும் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 8ஆம் தேதி பெங்களூருவில் முகமது ஹனீப் கான், இம்ரான் கான், அப்துல் சையது  ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு சிம் கார்டு வாங்கி கொடுத்ததாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பச்சையப்பன், ராஜேஷ் மற்றும் சேலத்தில் அப்துல் ரகுமான், அன்பரசன் ஆகியோரையும் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், லியாகத் அலிகான் என்பவர் தான், சிம் கார்டுகளை வாங்கி தீவிரவாதிகளுக்கு கொடுத்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, சேலத்தில் லியாகத் அலிகானையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே, மும்பையில் இருந்து ஆம்னி பேருந்து மூலம் துப்பாக்கிகளை வாங்கி வந்ததாக, இஜாஸ் அகமது என்பவர் பெங்களூருவில் கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சிறப்பு எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொலை செய்த அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகியோருக்கு தங்க இடம் கொடுத்ததாக பெங்களூருவைச் சேர்ந்த உசேன் ஷெரீப் என்பவரை கைது செய்த கியூ பிரிவு போலீசார், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவ்வாறு இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகள், இதற்கான விசாரணையை தொடங்கி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்