யானைகள் முகாமிற்கு ரஷ்ய கலை குழுவினர் வருகை : மவுத் ஆர்கன் வாசிக்கும் யானை லட்சுமியை கண்டு வியப்பு
மேட்டுப்பாளையம் அருகே யானைகள் முகாமில் கோயில் யானை மவுத் ஆர்கன் வாசிப்பதை ரஷ்ய குழுவினர் கண்டு ரசித்தனர்.
தேக்கம்பட்டியில் கோயில் யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. முகாமில்
உள்ள 28 யானைகள் யானைகளுக்கு நடைப்பயிற்சி, சமச்சீர் உணவு, பசுந்தீவனங்கள் மற்றும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 14 பேர் கொண்ட ரஷ்ய கலைக்குழுவினர் முகாமிற்கு வருகை தந்தனர். முகாமை சுற்றிப் பார்த்த அவர்கள், இரட்டை திருப்பதி அரவிந்த லோசனார் கோயில் யானை லட்சுமி, மவுத் ஆர்கன் வாசிப்பதை கண்டு ரசித்தனர். மேலும், செல்பி எடுத்தும், யானைகள் முன்பு புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story