"தமிழக கலை, கலாசாரம் தொல்லியல் சிறப்புமிக்கது" - ஹூஸ்டன் பல்கலைக் கழக டீன் புகழாரம்

தமிழகத்தின் கலை, கலாச்சாரம் உலகளவில் மிகப் பெரும் தொல்லியல் சிறப்புமிக்கது என அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழக டீன் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழக கலை, கலாசாரம் தொல்லியல் சிறப்புமிக்கது - ஹூஸ்டன் பல்கலைக் கழக டீன்  புகழாரம்
x
தமிழ் இருக்கை அமைய உள்ள ஹூஸ்டன் பல்கலைக் கழக  டீன் டில்லிஸ் டீ ஆன்டோனியோ அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை நேரில் பார்த்தார். நேற்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கீழடி அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் கலை, கலாச்சாரம் உலகளவில் மிகப்பெரும் தொல்லியல் சிறப்புமிக்கது என்றார். கீழடி வரலாறு பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இருந்து 21 ஆம் நூற்றாண்டு வரை தொடரும் வரலாறு என்றும் தெரிவித்த டில்லிஸ் டீ ஆன்டோனியோ, அதனை பார்த்து வியந்ததாக குறிப்பிட்டார்ர். அவரை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காமராசர் பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் சத்தியமூர்த்தி,  42 கோடி ரூபாய் செலவில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்