தனியார் பள்ளிக்கு நிகரான அரசு பள்ளி - மாற்றுத்திறனாளி ஆசிரியரின் முயற்சிக்கு குவியும் பாராட்டு
தர்மபுரியில் உள்ள அரசு பள்ளி ஒன்று ஆசிரியர் ஒருவரின் முயற்சியால் காலை சிற்றுண்டியுடன் தனியார் பள்ளிக்கு இணையாக விளங்கி வருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
தர்மபுரியில் உள்ள அரசு பள்ளி ஒன்று ஆசிரியர் ஒருவரின் முயற்சியால் காலை சிற்றுண்டியுடன் தனியார் பள்ளிக்கு இணையாக விளங்கி வருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. சோகத்தூர் ஊராட்சியில் உள்ள பூசாரிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தற்போது 30 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். 300க்கும் மாணவர்கள் பயின்று வந்த நிலையில், திடீரென மாணவர்களின் சேர்க்கை குறைந்தது. இந்நிலையில் இந்த பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியர் சுரேஷ், சேர்க்கை குறைவது குறித்து ஆய்வு செய்து, மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்தார். மாற்றுத்திறனாளி ஆசிரியர் சுரேஷின் இந்த முயற்சி, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
Next Story