காணும் பொங்கல் கொண்டாட்டம் - சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்
காணும் பொங்கலையொட்டி சென்னையில் மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
காணும் பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுலாதலங்களில் மக்கள் குவிந்தனர். சென்னையில் மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மற்றும் பொழுது போக்கு பூங்காக்களில் கூட்டம் அலைமோதியது. குழந்தைகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஏராளமானோர் மெரினாவில் குவிந்த நிலையில், கடற்கரை முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சி அளித்தது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஹெலிகாப்படர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரையோரத்தில் குதிரையில் அமர்ந்தபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நீச்சல் வீரர்கள் மோட்டார் படகுடன் மெரினாவில் மீட்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். 13 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் வாக்கி-டாக்கி, பைனாகுலர் மூலம் பணியில் ஈடுபட்டனர். 3 பறக்கும் கேமிராக்கள் மூலம் போலீசார் கூட்டத்தை கண்காணித்தனர். கடற்கரை முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சியளிப்பதால், சென்னை மெரினாவில் காணும் பொங்கல் களை கட்டியது.
Next Story