அவனியாபுரத்தில் 8 மணி நேரத்துக்கு மேலாக களை கட்டிய ஜல்லிக்கட்டு

பொங்கலை திருநாளையொட்டி, மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது.
அவனியாபுரத்தில் 8 மணி நேரத்துக்கு மேலாக களை கட்டிய ஜல்லிக்கட்டு
x
ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி மதுரையில் அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று காலை 8 மணிக்கு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. 9 சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் போட்டியில் மொத்தம் 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடி வாசல் வழியாக வந்த காளைகளை 736 காளையர்கள் பங்கேற்று அடக்கினர். அதிக அளவில் காளைகள் பங்கேற்றதால், மாலை 4 மணிக்கு நிறைவடைவதாக இருந்த ஜல்லிக்கட்டு போட்டி, அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. களத்தில் புகுந்த காளை மாடுகள், களத்தை கதி கலங்கச் செய்தன. 


Next Story

மேலும் செய்திகள்