முக்கிய வழக்குகளை நேரலை செய்யும் விவகாரம் : "இரு வாரங்களுக்கு பிறகு விசாரிக்கப்படும்" - தலைமை நீதிபதி

முக்கிய வழக்குகளை நேரலை செய்ய 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரி, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முக்கிய வழக்குகளை நேரலை செய்யும் விவகாரம் : இரு வாரங்களுக்கு பிறகு விசாரிக்கப்படும் - தலைமை நீதிபதி
x
முக்கிய வழக்குகளை நேரலை செய்ய 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரி, வழக்கு தொடரப்பட்டுள்ளது. முக்கியமான வழக்கு மற்றும் அரசியல் சாசன அமர்வில் வரும் வழக்குகளை, மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக நேரலை செய்யலாம் என கடந்த 2018 ஆம் ஆண்டு, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பு வழங்கினார். தற்போது, அந்த உத்தரவை அமல்படுத்துமாறு மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு இரண்டு வாரத்துக்கு பிறகு விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்