"ஜல்லிக்கட்டு: டோக்கனுக்கு ரூ.5000 வரை பேரம்" - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு டோக்கன் வழங்க லஞ்சம் பெறப்படுவதாக குற்றம்சாட்டி காளை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
x
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு டோக்கன் வழங்க லஞ்சம் பெறப்படுவதாக குற்றம்சாட்டி காளை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  700 டோக்கன்கள் வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்த நிலையில், 50 டோக்கன்கள் மட்டும் வழங்கிவிட்டு டோக்கன் தீர்ந்துவிட்டதாக விழா கமிட்டியினர் கூறியதாக தெரிகிறது. இதுஒருபுறம் இருக்க,  டோக்கன்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்த‌து. இதையடுத்து, காளை உரிமையாளர்கள் பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  இதனால்அங்கு பரபரப்பு நிலவியது. 

Next Story

மேலும் செய்திகள்