43 -வது சென்னை புத்தக கண்காட்சி - வாசகர்களின் வருகை நாள்தோறும் அதிகரிப்பு
43 ஆவது சென்னை புத்தக கண்காட்சிக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 43-வது சென்னை புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
வரும் 21 ந்தேதி வரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் 800 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 3 நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்துள்ளதாக
பதிப்பகத்தார் தெரிவித்தனர்.
சமூகம், அறிவியல், உடல் நலம், உணவு தயாரிப்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளதாக வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.
தினத்தந்தி அரங்கில் பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளதாகவும், அவற்றில் வரலாற்று சுவடுகள் புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் வாசகர்கள் தெரிவித்தனர்.
பல எழுத்தாளர்களின் புதிய நாவல்கள், சிறுகதை தொகுப்புகள் அழகிய புத்தகங்களாக விற்கப்படுவதாகவும், கண்காட்சியில் விற்கப்படும் புத்தகங்களுக்கு விலை தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் வாசகர்கள் தெரிவித்தனர்.
குழந்தைகளுக்கான பல புத்தகங்கள் அறிவாற்றலை வளர்க்கும் வகையில் உள்ளதாகவும், அவற்றை வாங்கி பயன்பெற வேண்டும் என்றும் புத்தக பதிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டு தோறும் சென்னையில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சிக்கு வாசகர்களின் வரவேற்பும், புத்தகங்களின் விற்பனையும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story