"ஜனநாயக மாண்புகளை, இளைஞர்கள் காக்க வேண்டும்" - ஸ்டாலின்
ஜனநாயகத்தின் மாண்புகளை காப்பாற்ற இளைஞர்கள் அணி திரள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரியுள்ளார்.
ஜனநாயகத்தின் மாண்புகளை காப்பாற்ற இளைஞர்கள் அணி திரள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 1921 ஜனவரி 12ம் தேதி கன்னாட் அவர்களால், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு தொடங்கிவிட்டதாக கூறியுள்ளார். சுப்பராயலு ரெட்டி தலைமையில், முதல் மாகாண சுயாட்சி சட்டமன்றம் முதல், தமிழ்நாடு என பெயர் சூட்டிய அண்ணா, பெண்களுக்கு சொத்துரிமை, இட ஒதுக்கீடு, சமத்துவபுரம் ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றிய கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் வரலாறும் நினைவும், சட்டப்பேரவைக்கு உள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். அந்தத் திராவிட இயக்க வேருக்கு உரம் சேர்த்து, பாதுகாக்க, இளைஞர்கள் ஆயத்தமாக வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story