கடலூரில் மறைமுக தேர்தலில் சுவாரஸ்யம்
கடலூர் மாவட்டத்தில்15 பேர் அதிமுக கூட்டணியிலும் 14 பேர் திமுக கூட்டணியிலும் இருந்ததால் மறைமுக தேர்தலின்போது பரபரப்பான சூழல் நிலவியது.
கடலூர் மாவட்டத்தில்15 பேர் அதிமுக கூட்டணியிலும் 14 பேர் திமுக கூட்டணியிலும் இருந்ததால் மறைமுக தேர்தலின்போது பரபரப்பான சூழல் நிலவியது. அதிமுக கூட்டணியில் உள்ள இரண்டு பெண் கவுன்சிலர்களுக்கு எழுதப்படிக்க தெரியாத நிலை இருந்த காரணத்தால் தலைவர் பதவிக்கு உரிய வேட்பாளர் திருமாறன் அந்த இரண்டு பெண் கவுன்சிலர்கள் கையிலும் தனது பெயரை எழுதிக் காண்பித்து இந்த மாதிரி எழுத்து இருக்கும் இடத்தில் வாக்களியுங்கள் என தெரிவித்தார். ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது என்பதால் ஏதாவது தவறு நடந்துவிடக் கூடாது என்ற நோக்கில் உஷாராக தலைவர் வேட்பாளர் வெளியிலேயே இவர்களை உஷார் படுத்தியது அனைவரையும் சிரிக்க வைத்தது.
Next Story