சிவகங்கை : பாரம்பரிய நெல்வகையை இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்தும் விவசாயி

பாரம்பரிய நெல்வகையை இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்தும் விவசாயி ஒருவர் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
சிவகங்கை : பாரம்பரிய நெல்வகையை இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்தும் விவசாயி
x
பாரம்பரிய நெல் வகைகளுள் ஒன்று சிவப்பு மாப்பிள்ளை சம்பா..

தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே பயிரிடப்பட்டு வந்த மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்தை சிவகங்கை மாவட்டத்திலும் அறிமுகம் செய்துள்ளார், வேம்பத்துரை சேர்ந்த விவசாயி ஸ்ரீதரன்.

நூற்று 60 நாள் பயிரான சிவப்பு மாப்பிள்ளை சம்பா, ஆறு அடி முதல் ஏழு அடி உயரம் வரை வளரக்கூடியது.சர்க்கரை நோயை தடுக்கும் இந்த நெல் வகைக்கு தற்போது அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. 

இயற்கை உரம் தயாரிக்க கொங்கு மண்டலத்தில் இருந்து காங்கேயம் மாடுகளை வாங்கிய ஸ்ரீதரன், அவற்றின் சாணம், கோமியம் மூலமாக ஜீவாமிர்தம் உரம் தயாரித்து வயல்களில் தூவி வருகிறார்..

ஏக்கர் ஒன்றுக்கு 500 கிலோ மண் புழு போதுமான நிலையில், அதனைவிட அதிகமான மண்புழு உரம் தயாரித்து அவற்றை மோருடன் கலந்து வயலில் தெளித்து வந்துள்ளார், ஸ்ரீதரன். 

இதனால் அறுவடைக்கு இன்னும் 40 நாட்கள் எஞ்சியுள்ள  
நிலையில், தற்போதே ஆறு அடி உயரம் வளர்ந்துள்ள நெல்லின் ஒரு நாற்றில் இருந்து சுமார் 15 முதல் 20 செடிகள் வரை வளர்ந்துள்ளது

இயற்கை உரம் சொந்தமாக தயாரித்து நெல் சாகுபடி செய்தால் ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் தான் செலவாகும் என்றும் கூறும்  ஸ்ரீதரன், அதனால் ஏக்கருக்கு மூன்று முதல் ஐந்து மடங்கு வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டு, இயற்கை விவசாயத்திற்கு அனைவரும் திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்