ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு : தமிழகத்தைச் சேர்ந்த 3பேர் அதிரடி கைது
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, தமிழகத்தை சேர்ந்த 3 பேர், டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூரைச் சேர்ந்த காஜா மொய்தீன், அப்துல் சமத் மற்றும் கன்னியாகுமரியை சேர்ந்த சயீது அலி நவாஸ் ஆகிய 3 பேரையும் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதில் காஜா மொய்தீன், அப்துல் சமத் இருவரும், இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் ஜாமீன் பெற்றவர்கள் என்பதும், இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை வலுப்படுத்த விரிவான திட்டம் தீட்டியதும் தெரிய வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான 3 பேரும், டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தவும், பின்னர் நேபாளம் சென்று அங்கிருந்து பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், அதிர்ச்சி தகவலை போலீஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதால், டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்படும் சமீம், தவுபீக் ஆகியோருக்கும், டெல்லியில் கைதான 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Next Story