பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் : சண்டைக்கு தயாராகும் கிடாய்களுக்கு தீவிர பயிற்சி
பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் கிடா சண்டை போட்டிக்காக ஆடுகளுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் சிவகங்கை பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் கிடா சண்டை போட்டிக்கு சிவகங்கை விவசாயிகள் தயாராகி வருகின்றனர். 2 வயதில் இருந்து வளர்த்து வரும் கிடாய்களுக்கு தினமும் காலையில் 2 மணி நேரம் முட்டு பயிற்சியும் மாலையில் நீச்சல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. முழுக்க முழுக்க பொழுது போக்கிற்காக நடத்தப்படும் கிடா சண்டையில் பங்கேற்கும் ஆடுகளுக்கு சிறப்பு உணவுகள் அளிக்கப்படுவதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சண்டையில் ஆக்ரோஷமாக காணப்படும் ஆடுகள், போட்டி முடிவடைந்த உடன் பயிற்சியாளரை கட்டி பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு பர்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கின்றன. சயனாபுரம், சொட்டதட்டி, பனையூர் உள்ளிட்ட ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்த பட்சம் 20 கிடாக்கள் சண்டைக்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story