கோலப் போராட்டம், நெல்லை கண்ணன் கைது - முதல்வர் விளக்கம்

சட்டப்பேரவையில், கோலப் போராட்டம் மற்றும் நெல்லை கண்ணன் கைது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
கோலப் போராட்டம், நெல்லை கண்ணன் கைது - முதல்வர் விளக்கம்
x
சட்டப்பேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கோலப்போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தங்களது வீட்டில் கோலம் போட்டால் பிரச்சனை இல்லை என்றும், அடுத்தவர்கள் வீட்டில் கோலம் போடும் போது தான் பிரச்சனை ஏற்படுவதாக கூறினார். தொடர்ந்து பேசிய பிரின்ஸ், நெல்லை கண்ணன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், பொதுக்கூட்டங்களில் என்ன பேச வேண்டும் என்கிற வரைமுறை இருப்பதாகவும், சோலியை முடியுங்கள் என பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார். பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவதை ஏற்க முடியாது. எதற்குமே ஒரு எல்லை உண்டு என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். 

"இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை..."

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கிடைக்க, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்