ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் அருந்ததியர் சமூகத்தினர் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு
பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்க அமைதி குழு அமைக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்க, அமைதி குழு அமைக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாலமேடு பகுதியை சேர்ந்த சந்தானம் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அருந்ததியர் இன மக்களிடம் நன்கொடைகள் பெறப்படுகிறது, ஆனால் விழாக்குழுவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
Next Story