ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு சுபஸ்ரீ தந்தை மனு - 4 வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான விவகாரத்தில், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவரது தந்தை அளித்த விண்ணப்பத்தை நான்கு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத டிஜிட்டல் பேனர் வழக்கு பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு மற்றும், 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவரது தந்தை தொடுத்த வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது . சுப ஸ்ரீ யின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 5 லட்சம் ரூபாயும் , அரசியல் கட்சிகள் சார்பில் 7 லட்சம் வழங்கபட்டுள்ளதாகவும்,ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவரது தந்தை அளித்துள்ள விண்ணப்பம் பரிசீலினையில் உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுபஸ்ரீ தந்தை அளித்த விண்ணப்பத்தை நான்கு வாரத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க அரசு தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story