ஊராட்சி தலைவர் பதவி குறித்து ஆலோசனை : அமைச்சர்களுடன், பாமகவினர் பேச்சுவார்த்தை

ஊராட்சி தலைவர் பதவி தொடர்பாக அதிமுக மூத்த அமைச்சர்களுடன், பாமக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
ஊராட்சி தலைவர் பதவி குறித்து ஆலோசனை : அமைச்சர்களுடன், பாமகவினர் பேச்சுவார்த்தை
x
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பாமக தலைவர் ஜி.கே. மணி, ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி, ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகள் போன்றவற்றிற்கான கூட்டணி குறித்து பேசியதாக கூறினார். இது தொடர்பான இறுதிமுடிவை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார் என்றும் ஜி.கே. மணி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்