குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி : கூட்டணி கட்சிகளுக்கு தமிழக பாஜக அழைப்பு
கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் 40 பேர், பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் 40 பேர், பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். சென்னை கமலாலயத்தில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் சென்னையில் இன்று நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், ஜனவரி 20 முதல் 26 ஆம் தேதி வரை, குடியுரிமை திருத்த சட்டம் பற்றி, தமிழகம் முழுவதும், வீடு வீடாக சென்று பாஜக தொண்டர்கள் விளக்கம் அளிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
Next Story