ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் தீவிரம் - "அலங்காநல்லூர், பாலமேட்டில் அதிகாரிகள் ஆய்வு"

ஜல்லிக்கட்டு நடைபெறும், அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் தீவிரம் - அலங்காநல்லூர், பாலமேட்டில் அதிகாரிகள் ஆய்வு
x
ஜனவரி 15-ல் மதுரை மாவட்டம் அவனியாபுரத்திலும், ஜனவரி 16-ல் பாலமேட்டிலும், ஜனவரி 17-ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை ஜல்லிகட்டு குழுவினர் மும்முரமாக செய்து வரும் நிலையில், வருவாய் துறை  மற்றும் காவல்துறை அதிகாரிகள், அந்த பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தனர். காளைகள் வெளியேறும்  வாடிவாசல் பகுதிகளை பார்வையிட்ட அதிகாரிகள்,
போதுமான இடவசதி ஏற்படுத்தி கொடுப்பது குறித்தும் ஆய்வு செய்தனர். ஜல்லிகட்டு கேலரி அமைக்கும் பணியை தொடங்க ஆலோசனை வழங்கிய அதிகாரிகள், போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளனர். 700 காளைகள் போட்டியில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அதிகாரிகள், காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை நாளை முதல் அந்தந்த பகுதி கால்நடை மருத்துவமனையில் நடை பெறும் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்