உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடை கோரி திமுக வழக்கு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாளை பதவியேற்க உள்ள நிலையில், கரூர், சேலம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பதவியேற்புக்கு தடை விதிக்கக் கோரி தி.மு.க. மனு தாக்கல் செய்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நாளை திங்கட்கிழமை காலை 10 மணியளவில் பதவி ஏற்க உள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலை, தர்மபுரி, மன்னார்குடி, திருவள்ளூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவி ஏற்க தடை விதிக்கக் கோரி திமுக தரப்பில், உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு இல்லத்தில் முறையீடு செய்துள்ளனர். வாக்கு எண்ணக்கையில் முறைகேடு செய்து அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பதாகவும், அதனால் மறு வாக்கு எண்ணிக்கை செய்யும் வரை அவர்கள் பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Next Story