ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி
ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் உள்ள ஆளுநரை பதவி நீக்கம் செய்ய கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பரில் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
அமைச்சரவையின் பரிந்துரைக்கு பிறகும் அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல், அரசியல் சாசன விதிகளை மீறி தமிழக ஆளுநர் செயல்பட்டுள்ளதால், அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு, கண்ணதாசனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Next Story