"தமிழகத்துக்கு கடந்த ஆண்டு சிறந்த ஆண்டு" - அமைச்சர் செல்லூர் ராஜூ மகிழ்ச்சி
தமிழகத்துக்கு கடந்த ஆண்டு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு கடந்த ஆண்டு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த செல்லூர் ராஜூ, செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் அனைத்து துறைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்றும், இது ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் மகிழ்ச்சியான விஷயம் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story