குடியுரிமை சட்டத்திருத்த‌த்திற்கு எதிராக பேரணி : ஸ்டாலின், சிதம்பரம் உள்பட 14,125 பேர் மீது வழக்கு

தி.மு.க. பேரணி நடத்தியது தொடர்பான வழக்குப் பதிவில், காவல்துறையினர் தங்களது நடவடிக்கையை தொடரலாம், என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்த‌த்திற்கு எதிராக பேரணி : ஸ்டாலின், சிதம்பரம் உள்பட 14,125 பேர் மீது வழக்கு
x
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக, தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் அறிவித்த பேரணிக்கு தடை கோரி, வாராகி மற்றும் எழிலரசு ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பேரணி நடக்கும் பட்சத்தில், அதை முழுவதுமாக வீடியோ பதிவு செய்து சமர்பிக்குமாறு காவல்துறைக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பேரணி தொடர்பாக, வீடியோ பதிவு செய்த காவல்துறையினர், எழும்பூர் காவல் நிலையத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ் அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 125 பேர் மீது, வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவல்துறையின் நடவடிக்கை தொடரலாம் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்