"ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவை வெளியிடலாம்" - சென்னை உயர்நீதிமன்றம்
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க முடியாது என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க முடியாது என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கக் கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரக உள்ளாட்சிகளுக்கும், நகர்புற உள்ளாட்சிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்த சட்டப்பூர்வமாக எந்த தடையும் இல்லை என மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சிகளில் வாக்களிக்கும் வாக்காளர்கள் வெவ்வேறானவர்கள் என்றும், சட்டப்பூர்வ தடை ஏதும் இல்லாததால் மனுவை ஏற்க முடியாது எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Next Story