விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்...
அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், அரையாண்டு விடுமுறையும் சேர்ந்துள்ளதால், ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் திரண்டனர். குழந்தைகளுடன் வந்த பயணிகள் கடற்கரையில், விளையாடியும், குளித்தும் பொழுதைக் கழித்தனர். கடல் அலையுடன் விளையாடியும் அவர்கள் மகிழ்ந்தனர். குழந்தைகள் முதல் பெரியோர் வரை புனித நீராடி மகிழ்ந்தனர். சபரிமலை பக்தர்களின் வருகையும் அதிகரித்து உள்ளதால், திருச்செந்தூர் கடற்கரை களைகட்டியது.
Next Story