பொங்கல் பண்டிகை : வெல்லம் தயாரிக்கும் பணிகள் மும்முரம்

தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகை : வெல்லம் தயாரிக்கும் பணிகள் மும்முரம்
x
தஞ்சாவூர் அருகே, அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் ஆகியவை  தமிழகத்தில் பிற நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், கரும்புகளில் இருந்து சாறு பிழிதிறன் குறைவாக உள்ளதால், வெல்லம் உற்பத்தி குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.  கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு விலை குறைந்துள்ளது என்றும் குறிப்பிட்டனர். தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு அனைத்து ரேசன் கடைகளிலும் வெல்லம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்