"கல்வியை சுகமானதாகவும், சுமையற்றதாகவும் மாற்ற வேண்டும்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

கல்வியை சுகமானதாகவும், சுமையற்றதாகவும் மாற்ற வேண்டும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கல்வியை சுகமானதாகவும், சுமையற்றதாகவும் மாற்ற வேண்டும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
x
கல்வியை சுகமானதாகவும், சுமையற்றதாகவும் மாற்ற வேண்டும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சி.பி.எஸ்.இ.-க்கு கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளின் வளாகங்களும் கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளாக மாற்றப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நோக்கம் வரவேற்கப்பட வேண்டியது என்றாலும் கூட, கல்வி முறையை சுமையற்றதாக மாற்றாமல், அலங்கார அணுகுமுறை பயனளிக்காது என்று தெரிவித்துள்ளார். கல்வியை சுகமானதாகவும், சுமையற்றதாகவும் மாற்ற வேண்டும் என்றும், இதன் மூலம் தான் பள்ளிகளை கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளாக மாற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  



Next Story

மேலும் செய்திகள்