ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் திருநங்கை - பரிசுகள் குவிந்து வருவதாக திருநங்கை பெருமிதம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக மதுரை அருகே திருநங்கை ஒருவர் தான் வளர்க்கும் காளைக்கு தீவிர பயிற்சி அளித்து வருகிறார்.
பொங்கல் பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் உள்ளனர்.
இதையொட்டி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்து போட்டிகளில் பங்கேற்க வைக்க அதன் உரிமையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக
மதுரை அருகே கல்லணை கிராமத்தை சேர்ந்த திருநங்கை சிந்தாமணி தான் வளர்க்கும் காளைக்கு தீவிர பயிற்சி அளித்து வருகிறார்.
திருநங்கை சிந்தாமணி 4 ஆண்டுகளுக்கு முன்பு ராமு என்ற காளையை வாங்கி பயிற்சி அளித்து வருகிறார். மண் குத்தும் பயிற்சி, நடைபயிற்சி
என பல கட்ட பயிற்சி அளித்து ராமு காளையை பல ஜல்லிக்கட்டு போட்டிகளில் அவர் களமிறக்கினார்.
மாடுபிடி வீரர்களை விரட்டியடித்து பல பரிசு பொருட்களை தனக்கு ராமு பெற்று தந்ததாக சிந்தாமணி தெரிவித்துள்ளார்.
தான் வளர்க்கும் காளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வீட்டில் முடங்கி கிடந்த தனது வாழ்க்கையை மாற்றி விட்டதாக ஆனந்த கண்ணீருடன் கூறுகிறார் திருநங்கை சிந்தாமணி
Next Story