புதுக்கோட்டையில் மதுபோதை வாக்காளர் செய்த ருசிகர சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தில் மதுபோதையில் வாக்காளர் வாக்குப் பெட்டியை தூக்கிச் சென்ற சம்பவம் ருசிகரத்தை ஏற்படுத்தியுள்ளது
புதுக்கோட்டையில் மதுபோதை வாக்காளர் செய்த ருசிகர சம்பவம்
x
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தில் உள்ள பெரிய முல்லிப்பட்டி வாக்குச்சாவடிக்கு மூர்த்தி என்பவர் மதுபோதையில் வாக்கு அளிக்க வந்துள்ளார். வாக்களிக்கும் நேரம் முடிந்து விட்டதாக வாக்குச் சாவடி அலுவலர்கள் கூறியுள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த வாக்காளர் மூர்த்தி, போலீசார் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களை தள்ளிவிட்டு வாக்கு பெட்டியை தூக்கிச் சென்றுள்ளார். அவரிடம் இருந்து வாக்கு பெட்டியை பறிமுதல் செய்த போலீசார், மூர்த்தியை கைது செய்தனர். அவருக்கு உடந்தை என்ற சந்தேகத்தில் வாக்குச் சாவடி முகவராக இருந்த ஐயப்பனையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்