"தேர்தல் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுக்கு ஊதியம் நிர்ணயம்" - தமிழக அரசு அரசாணை வெளியீடு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு, தகுதிக்கு ஏற்ப தேர்தல் ஊதிய நிர்ணயித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு, தகுதிக்கு ஏற்ப தேர்தல் ஊதிய நிர்ணயித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அரசாணையில், பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு, 12 கோடியே 14 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு ஒரு கோடியே 38 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Next Story