ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு - 24,680 வாக்குச்சாவடிகளில் ஆர்வமுடன் மக்கள் வாக்களிப்பு
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை மக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முதல் கட்டத்தில், 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.
இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள் . 13 ஆயிரத்து 764 அலுவலர்களும், 63 ஆயிரம் போலீசாரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்ட வாக்கு பதிவு நிறைவுற்றதும், 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு 30-ஆம் தேதி நடக்கிறது. அவற்றில் பதிவாகும் அனைத்து வாக்குகளும் ஜனவரி 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
Next Story