வாக்களிப்பதற்காக சொந்த ஊர் சென்ற மக்கள் : பேருந்து இல்லாமல் சிரமம்

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு ஏராளமானோர் புறப்பட்டுச் சென்றனர்.
x
தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுவதையொட்டி, சென்னையில் உள்ள வெளியூர் மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். தங்கள் வாக்குகளை செலுத்துவதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நேற்று இரவு அவர்கள் வந்த நிலையில், போதிய  பேருந்துகள் இல்லாததால் கடும் அவதிக்கு உள்ளாகினர். நள்ளிரவில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர். போதிய பேருந்து இல்லாததால் மணிக் கணக்கில் காத்து நிற்பதாகவும்  தேர்தல் சமயத்தில், சிறப்பு பேருந்துகளை அரசு இயக்காதது  ஏன் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்