காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராடிய வழக்கு : திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜர்

குடியுரிமை சட்ட விவகாரத்தில் மக்களை திசை திருப்ப மத்திய அரசு முயற்சிப்பதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராடிய வழக்கு : திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜர்
x
குடியுரிமை சட்ட விவகாரத்தில் மக்களை திசை திருப்ப  மத்திய அரசு முயற்சிப்பதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர்  திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, போராட்டம் நடத்திய வழக்கில், திருமாவளவன் மற்றும் கராத்தே தியாகராஜன் ஆகியோர், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகல்களை பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளன், தமிழக மக்களுக்காகவும், விவசாயிகளுக்கும் நடத்தப்பட்ட போராட்டம், தொடர்பாக பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறினார். அந்த வழக்கை எதிர்கொண்டு முறியடிப்போம் எனவும் திருமாவளவன்  தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்