மணப்பாறை: வாக்காளர் பெயர்கள் வேறு கிராமத்திற்கு மாற்றம் - சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் வேறு கிராமத்திற்கு மாற்றப்பட்டதாகக் கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் வேறு கிராமத்திற்கு மாற்றப்பட்டதாகக் கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். வளநாடு ஊராட்சிக்கு உட்பட்ட வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வாக்காளர்களை அருகில் உள்ள இரண்டு கிராமங்களில் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது. இதனைக் கண்டித்து சாலைமறியல் செய்த அப்பகுதி மக்கள், தேர்தல் அதிகாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story