திருவண்ணாமலை: பாத்திரக்கடைகளில் அலைமோதிய கூட்டம் - பரிசு பொருட்கள் விநியோகம் என குற்றச்சாட்டு

தேர்தல் நேரத்தில் திருவண்ணாமலையில் பாத்திரக்கடைகளில் கூட்டம் அலைமோதியதால் பரிசு பொருட்கள் விநியோகம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவண்ணாமலை: பாத்திரக்கடைகளில் அலைமோதிய கூட்டம் - பரிசு பொருட்கள் விநியோகம் என குற்றச்சாட்டு
x
அவலூர்பேட்டை சாலையில் உள்ள மொத்த வியாபார பாத்திரக்கடையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் குவிந்தனர். பித்தளை குடம், தவளை, காமாட்சி விளக்கு உள்ளிட்ட சாமான்களை மூட்டை மூட்டையாக அவர்கள் வாங்கி சென்றனர். அந்த சாமான்களை, மினி லாரி மற்றும் டாட்டா ஏசி வாகனங்களில் ஏற்றுக் கொண்டு தங்கள் கிராமங்களுக்கு சென்றதால் அவலூர்பேட்டை சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது.  இந்த பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்