மயிலாடுதுறை: அதிமுக கூட்டணி கட்சி அலுவலகம் மீது தாக்குதல்
மயிலாடுதுறை அருகே பா.ஜ.க. தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை அருகே பா.ஜ.க. தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குத்தாலம் அருகே உள்ள பெரம்பூர் ஊராட்சியில் அதிமுக கூட்டணி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பாஜக வேட்பாளர் சேதுராஜா என்பவர் போட்டியிடுகிறார். அதற்காக பெரம்பூர் கடைத்தெருவில் கூட்டணி கட்சி சார்பில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு, தேர்தல் அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கி பேனர்களை கிழித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அதிமுக கூட்டணி கட்சியினர் கடைவீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story