ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக கருத்து வேறுபாடு - வருவாய்த்துறை பேச்சுவார்த்தை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக இரு தரப்பு இருதரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை சார்பில் அவனியாபுரம் காவல் நிலையத்தில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை தெற்கு வட்ட தாசில்தார் அனிஸ் அக்தார், முன்னிலையில் காவல்துறை உதவி ஆணையர் ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து வரும் 28ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைவரும் கலந்து கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது.
Next Story