கடலூர்: வாக்கு சாவடிகளுக்கு பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்
கடலூர் மாவட்டத்தில் வாக்கு சாவடிகளுக்கு தேவையான 72 வகையான பொருட்களை அனுப்புவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் வாக்கு சாவடிகளுக்கு தேவையான 72 வகையான பொருட்களை அனுப்புவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக நாளை மறுநாள் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 1596 வாக்குச்சாவடி மையங்களில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தேவையான ஓட்டுப் பெட்டிகள், ஓட்டுச் சீட்டுகள், முத்திரை, அழியாமை, வாக்காளர் பட்டியல், மெழுகுவர்த்தி, அரக்கு, பிளேடு உள்ளிட்ட 72 வகையான பொருட்களை பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் இந்த பொருட்களை வாக்குச்சாவடிக்கு தகுந்தவாறு பிரித்து வைத்து வருகின்றனர்.
Next Story