ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் : தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை
முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது.
முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், அமைதியாகவும் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்தல் நடைபெற உள்ள 2 நாட்களும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல தேர்தல் நடக்கும் தேதிகளுக்கு 2 நாட்களுக்கு முன் வாக்காளர்கள் அல்லாத கட்சி பிரமுகர்கள் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும், இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
Next Story