90ம் ஆண்டுகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை பயணம்
பள்ளி படிப்பு ஆரம்பித்து வேலை, திருமணம், வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் வரை 90'ஸ் கிட்ஸ் அனுபவித்த வாழ்க்கை முறை உங்கள் பார்வைக்கு
ஆயிரத்தி 990 ஆண்டு முதல் ஆயிரத்தி 999 ஆண்டு வரை பிறந்தவர்கள் 90'ஸ் கிட்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இப்படி அழைப்பதற்கான முக்கிய காரணம் ,
தங்கள் வயதை கூற மறுக்கும் இளைஞர்கள், பிறந்த காலகட்டத்தை சொல்லி தப்பலாம் என்பது தான்..
இணையத்திலும், 90'ஸ் கிட்ஸின் பரிதாபங்கள் என்ற பெயரில் மீம்ஸ்கள், கருத்துகள், காமெடி வீடியோக்கள்.. அதிகம் வலம் வருகின்றன
2k கிட்ஸ் என்று அழைக்கப்படும் 2000ல் பிறந்தவர்களுக்கும், 90'ஸ் கிட்ஸ்களுக்கும் இடையே இணையத்தில் வாதங்களும் நடந்து வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிந்தைய காலகட்டம் தான் அதில் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன.
பெண்களிடம் பேச தயங்குவது, தொலைக்காட்சி பெட்டியை ஆச்சர்யமாக பார்ப்பது, ஆசிரியர்களை கண்டால் பயந்து நடுங்குவது, வானில் விமானங்கள் சென்றால் வெளியே ஓடி வந்து டாட்டா காமிப்பது என்று வாழ்ந்த 90'ஸ் கிட்ஸ் , தற்போது 2k கிட்ஸின் வாழ்க்கை முறையை கண்டு வியக்கின்றனர்.
வெயிலில் விளையாடிய 90'ஸ் கிட்ஸ், பின்பு காலத்தின் கட்டாயத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு உழைத்ததன் காரணமாக இன்று சமுதாயத்தில் பல்வேறு உயர் பதவிகளில் இருக்கின்றனர்.
90'ஸ் கிட்ஸ், பெரும்பாலானோர் காதல் திருமணம் அல்லது, திருமணம் கூட செய்து கொள்ளவில்லை என்று அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது
இவை எல்லாம் உண்மை என்றாலும் அந்த காலத்தில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்பதை மனதில் கொண்ட 90'ஸ் கிட்ஸ் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் சிக்கி தலைகுனிந்து செல்போனை பார்த்த படியே நடக்கின்றனர் என்பதே மறுக்க முடியாத உண்மை.
Next Story