உள்ளாட்சி தேர்தல் - டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி டாஸ்மாக் அரசு மற்றும் தனியார் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஊரக - உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ஆம் தேதி நடைபெறுகிறது.
இதனையொட்டி, டிசம்பர் 25ஆம்தேதி மாலை 5 மணி முதல், 27ஆம் தேதி மாலை 5 மணி வரையும்,
28ஆம் தேதி மாலை 5 மணி முதல் 30ஆம் தேதி மாலை 5 மணி வரையும், அரசு டாஸ்மாக் மற்றும் தனியார் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என அட்டவணை வெளியாகி உள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜனவரி 2ஆம் தேதி அன்றும், அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர்,
திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த உத்தரவு செல்லாது என்றும் தமிழக அரசின் கலால்துறை அறிவித்துள்ளது.
Next Story