யானைகளுக்கு "புட்பாத்" மருத்துவம் - யானைகள் புத்துணர்வு முகாமில் சிறப்பு சிகிச்சை

கோயில் யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகாமில் யானைகளுக்கு பாத வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
யானைகளுக்கு புட்பாத் மருத்துவம் - யானைகள் புத்துணர்வு முகாமில் சிறப்பு சிகிச்சை
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்கள், மடங்களில் உள்ள யானைகளுக்கான புத்துணர்வு முகாம், கோவை மாவட்டம், தேக்கம்பட்டியில் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  48 நாட்கள் நடைபெறும், இந்த முகாமில்  28 யானைகள் பங்கேற்றுள்ள நிலையில், அவற்றின் உடல் நல குறைபாடுகளை தீர்க்கும் விதமாக, கால்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சையான 'புட்பாத்'  சிகிச்சை தொடங்கப்பட்டது.
பெரிய பாத்திரத்தில், மருந்து கரைசலை ஊற்றி அதற்குள் யானையின் கால்களை  வைத்து மருத்துவ சிகிச்சை  தரப்பட்டது. பாதங்களில் உள்ள காயங்களைப் பொறுத்து பிற சிகிச்சை முறைகள் தொடரும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்